Tuesday, December 15, 2009

காற்றாடியும் குழந்தையும்

கடற்கரையிலிருந்து
திரும்பிய போது
குழந்தைக் கேட்டாள்

அப்பா நான் தொலைச்ச
காத்தாடி என்னாவும்

வானத்தில
ஒரு அம்மா இருக்கா
அவ பத்திரமா
இது மாதிரி தொலைஞ்ச
காத்தாடிகளப் பாத்துக்குவா

அப்பாவின் பதிலில்
தூங்கத் தொடங்கினாள்
குழந்தை

புன்னகைத்தாள் அம்மா

தன் குழந்தையை
நினைத்தபடி
ஓட்டினார் ஆட்டோக்காரர்

4 comments:

  1. //புன்னகைத்தாள் அம்மா// நானும் கூட.
    அருமையா இருக்கு ராஜா.

    ReplyDelete
  2. இந்தக் கவிதை தரும் உணர்வு, ஆகா என்னால் இந்தத் தருணத்தின் மேன்மையை உணர மட்டுமே முடியும், என் உணர்வுகளை வார்த்தைகளாக்க முடியவில்லை, என்னை மெல்லிய இறகாய் மிதக்க வைத்துக் கொண்டிருக்கும் இக்கவிதைக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  3. நன்றி கல்யாணி

    நன்றி யாத்ரா.நலமா.உங்களின் நெகிழ்வான வரிகளுக்கு நன்றி.

    ReplyDelete
  4. kaatchi virikirathu..........azhagaaga!

    ReplyDelete