தான் வரைந்ததைக் காட்டி
கேட்கிறாள் சிறுமி
அருவி என்கிறார் அப்பா
ஓவியத்தை மேல்கீழாக்கி
என்ன என்கிறாள்
இது தப்பு என்கிறார்
தலைகீழாய் யோகா
செய்யும் அருவி என்கிறாள்
சிரித்தபடி
தூக்கி கொஞ்சுகிறார் தந்தை
குழந்தை அருவியை
(ஜெஸிக்காவுக்கு)
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
அழகு சார்...
ReplyDeleteகவிதை ஜெஸிக்காவிற்கு ...?
ReplyDeleteநன்றி தருமி
ReplyDeleteஜெஸிக்காவை நிறைய வரைய சொல்லுங்கள்.
நிச்சயமாக, ராஜா.
ReplyDeleteஅவளுக்காகக் கவிதை எழுதியதற்காக மிக்க நன்றி.........
தமிழ்பறவை
ReplyDeleteஉங்களின் தொடர்ந்த வாசிப்பிற்கும்
எழுத்துக்கும் நன்றி
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
ஆகா அருமை, அழகு.
ReplyDeleteயாத்ராவுக்கு
ReplyDeleteஅன்பும் நன்றியும்
அழகான உணர்வு. அதை அழகுற வெளிப்படுத்தியிருக்கும் கவிதை. வாழ்த்துகள்
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்