நீருக்குள்
கால்பந்து ஆடிய தேவதை
விளையாட வரச் சொன்னாள்
நீச்சல் தெரியாது என்றேன்
வருத்தத்துடன்
ஆடத் தெரியுமா என்றாள்
இல்லை என்றேன்
ஒன்றைக் கற்றுக் கொள்
அது இன்னொன்றை
சொல்லித் தரும் என்றபடி
பந்தை உதைத்து
மறைந்து போனாள்
நதிக்கரை சிலையாய் அமர்ந்திருந்த
என்னை கலைத்தது
குளித்துக் கரையேறிய
சிறுமியின் சிரிப்பு
அவள் கண்களில்
தேவதையின் புன்னகை
சிறுமிடம் தேவதையைப் பார்த்த உங்கள் கவிமனதுக்கு சல்யூட்!
ReplyDeleteநானும் தேவதைகளைக் காணும் பாக்கியம் பெற்றவன் :)
ReplyDeleteநல்ல கவிதை!
-ப்ரியமுடன்
சேரல்
பரிசல்காரன் said...
ReplyDeleteசிறுமிடம் தேவதையைப் பார்த்த உங்கள் கவிமனதுக்கு சல்யூட்!
இதுவே!
பல படிமங்களை உள்அடக்கிய கவிதை இது
ReplyDeleteசிறுமி நம் எல்லோர் மனதிலும் இருக்க வேண்டிய ஒருத்தி
இருக்க கூடியதும் கூட. தேவதையின் சொல் ஆழமானது.
இப்படியாக சொல்லி கொண்டே போகலாம் .
எப்பொழுதும் போல் 'அருமை'