அந்தக் கதையில்
நிறைய அறைகள் இருந்தன
ஒவ்வொருவராகப் புகுந்து
வெளியேறிக் கொண்டிருந்தனர்
அந்தக் கதையில்
நிறைய ஜன்னல்கள் இருந்தன
காற்றும் இசையும்
உள் நிறைந்து
வெளி வந்தது
அந்தக் கதையில்
நிறைய மரங்கள் இருந்தன
அணிலும் பறவைகளும் விளையாடின
அந்தக் கதையில்
விதைகள் நடப்பட்டிருந்தது
படிக்கப் படிக்க
பூத்துக் குலுங்கியது
அந்தக் கதையில்
மழை பெய்தது
வானவில் தென்பட்டது
கடவுள் குழந்தைகளோடு
பேசிக்கொண்டிருந்தார்
அந்தக் கதையில்
வாசிப்புத் தன்மை
கடைசி பக்கத்திலிருந்தும்
படிப்பதுபோல் அமைந்திருந்தது
முன்னிருந்தும் பின்னிருந்தும்
படித்துக் கொண்டே வந்தவர்கள்
சந்தித்துக் கொண்டார்கள்
வெற்றிடமான பக்கங்களில்
அமைதியாக உங்களைப் படியுங்கள்
என்ற குறிப்பு மட்டும்
காணப்பட்டது
ஒரு படைப்பின் வெற்றியும் கூட.
ReplyDeleteஇந்த கவிதையை போல
நல்லா இருக்கு. ரசித்தேன்.
ReplyDeleteஅற்புதம்!
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
beauty!! as ever!!
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteஅழகான கவிதை
வெற்றிடத்தைக்கூட கவிதையாக்க உன்னால் மட்டுமே முடியும் நண்பா.... அருமை.
ReplyDelete:)
ReplyDelete