நீ வீட்டுக்குப் போ
என்று சொல்லிவிட்டு
அப்பா நீரில் குதித்து
தற்கொலை செய்துகொண்டதாக
அவன் சொன்னான்
அதன் பிறகுதான்
நீச்சல் கற்றுக்கொண்டதாகவும்
சொன்னான்
நதியில்
தொலைந்துபோன அப்பாவை
ஒரு நாள் கண்டுபிடித்துவிடுவேன்
என்றும் சொன்னான்
Tuesday, January 24, 2012
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment