Powered by Blogger.

சில பார்வைகள்

Thursday, April 08, 2010

உடைத்து விட்ட பொம்மை
அழுகையை
பொறுக்கும் குழந்தை
-------
விபத்து
நசுங்காமல் கிடக்கிறது
பிறந்த நாள் கேக்
-------
இரவு நடுக்கம்
பீடி பற்ற வைக்க
வத்திப்பெட்டியோடு போராடும் காவலாளி
-------
குறுகிய சாலை
தவிர்த்தபடி போகிறார் நண்பர்
தவிர்க்கத் தெரியாமல்
-------
குளம்
சிற்றலை கற்றுத்தரும் நீச்சல்
நிலவுக்கு
-------

6 comments:

சேரல் said...

//குளம்
சிற்றலை கற்றுத்தரும் நீச்சல்
நிலவுக்கு//

இது மிகப்பிடித்திருக்கிறது

-ப்ரியமுடன்
சேரல்

கவிதன் said...

//குளம்
சிற்றலை கற்றுத்தரும் நீச்சல்
நிலவுக்கு//

அழகான கற்பனை சார்!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி சேரல்,கவிதன்.

இரசிகை said...

உடைத்து விட்ட பொம்மை
அழுகையை
பொறுக்கும் குழந்தை
-------
:(

விபத்து
நசுங்காமல் கிடக்கிறது
பிறந்த நாள் கேக்
-------
soft...!

இரவு நடுக்கம்
பீடி பற்ற வைக்க
வத்திப்பெட்டியோடு போராடும் காவலாளி
-------
:)

குறுகிய சாலை
தவிர்த்தபடி போகிறார் நண்பர்
தவிர்க்கத் தெரியாமல்
-------
ok...

குளம்
சிற்றலை கற்றுத்தரும் நீச்சல்
நிலவுக்கு

superb....:)

நந்தா said...

nice . Have a look at these http://tamil-hikoo.blogspot.com/

padma said...

அனைத்தும் அருமை .முக்கியமாக அந்த நிலா

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்