Wednesday, August 25, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

164-

மை இருட்டில்
மெய் இருட்டை எழுத
போனது
பொய் இருட்டு

165-

இல்லாதது எதுவும்
இருப்பதில்லை
நுரைத்த வார்த்தைகளை
துப்பிவிட்டு நடந்தேன்
எச்சில் பொய்களுடன்

166-

காற்றை
உளியால்
செதுக்கும் போதெல்லாம்
உதிர்கிறது இசை
சிலையென

167-

மரணத்தை சிறிதளவு
ஒரு மாத்திரையைப் போல
விழுங்கிவிட்டுப் படுத்தேன்
நன்றாகத் தூக்கம் வந்தது

3 comments:

  1. //165-

    இல்லாதது எதுவும்
    இருப்பதில்லை
    நுரைத்த வார்த்தைகளை
    துப்பிவிட்டு நடந்தேன்
    எச்சில் பொய்களுடன்

    166-

    காற்றை
    உளியால்
    செதுக்கும் போதெல்லாம்
    உதிர்கிறது இசை
    சிலையென

    167-

    மரணத்தை சிறிதளவு
    ஒரு மாத்திரையைப் போல
    விழுங்கிவிட்டுப் படுத்தேன்
    நன்றாகத் தூக்கம் வந்தது //

    எல்லா கவிதைகளும் நல்லா இருக்குங்க... மேலுள்ள மூன்றும் மிகப்பிடித்தது எனக்கு...
    ஆழ்ந்த பொருள்... சின்ன சின்ன வார்த்தைகள் சேர்த்து, பெரிய பெரிய பொருள் கொடுத்திருக்கிறீர்கள்...

    நன்று நண்பரே....

    ReplyDelete