Tuesday, August 17, 2010

கடவுளுடன் உரையாடல்

கடவுளிடம்
என் டேட் ஆப் டெத்
பற்றிக் கேட்டேன்

சிரித்தார்

மீண்டும் கேட்டேன்

சிலதை ரசிக்கப் பழகு
சிலதை ஒதுக்கப் பழகு
சிலதை விரும்பப் பழகு
சிலதைப் பார்க்கப் பழகு

சொல்லிக் கொண்டே சென்றார்

மீண்டும் என்
சாவு தேதி குறித்து
சத்தமாய்க் கேட்டேன்

சொன்னார்

சிலதை
தெரிந்து கொள்ளாதிருக்கப் பழகு

அந்த அசரீரியோடு
முடிந்து போனது
கடவுளுக்கும் எனக்குமான
உரையாடல்

5 comments:

  1. இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமே க்டவுளிடம்!

    ReplyDelete
  2. //சிலதை
    தெரிந்து கொள்ளாதிருக்கப் பழகு//

    ரொம்ப நல்லா இருக்குங்க ராஜா.

    ReplyDelete
  3. ரொம்ப பிடிச்சிருக்கு ராஜா.

    ReplyDelete