Sunday, August 22, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

160-

காலங்கள்
ஓடிவிட்டதை நினைத்துக்
கவலைப்படுகிறீர்களா

இல்லை காலங்களோடு
ஓடிக்கொண்டிருப்பதை நினைத்து
சந்தோஷப்படுகிறேன்

161-

என்னுடன் யாருமில்லை
இந்த வரி தந்த கலக்கம்
அவர்களுடன் நானிருக்கிறேன்
என்று மாற்றியபோது
இல்லாமல் போனது

162-

யார்கூடி நகர்த்த
தேருக்கடியில்
நசுங்கிய காலம்

163-

தூண்டிலில் சிக்கிய
மீனின் கண்களில்
விடை பெறும் நதி

7 comments:

  1. அருமை சார்.

    நலமா? நீண்ட நாட்களாகவே பின்னூட்டம் இட முடியவில்லை. படித்துக் கொண்டிருக்கிறேன். விரிவாக எழுதுகிறேன். :)

    ReplyDelete
  2. //
    தூண்டிலில் சிக்கிய
    மீனின் கண்களில்
    விடை பெறும் நதி
    //

    hiyo........remba remba pidichchurukkunga...:)

    ReplyDelete
  3. 160.
    வரிகளில் வாழ்வின் ஜீவிதம் தெரிகிறது.

    161.
    இந்த நேர்மறை சிந்தனை நல்லாயிருக்கு ராஜா.

    162.
    ஊர் கூடினால் நல்லாதான் இருக்கும்.

    163.
    வாழ்விடத்தையும், வாழ்வினையும் இழந்துவிட்ட வலியினை உணர முடிகிறது.

    ReplyDelete
  4. //தூண்டிலில் சிக்கிய
    மீனின் கண்களில்
    விடை பெறும் நதி //


    ஐயோ, கொன்னுட்டீங்க போங்க.... சொல்ல வார்த்தையே இல்லைங்க..
    மூன்றே வரிக்குள்ளே!!!! பிரமாதம்....

    ReplyDelete