Tuesday, September 01, 2009

கண்ணாடி கோப்பை

ஏறக்குறைய
விழுந்து விடுவதுபோல்
மேஜை மீது
ஓரமாய் வைக்கப்பட்டிருக்கும்
கண்ணாடி கோப்பை
விழத்தொடங்கியது
எதிர்பார்த்தது போலவே
எவரின் கையோ தீண்டி
உடைந்து நொறுங்கிய
சில்லுகளின் சத்தம்
கேட்ட கவிதை
தன் வரிகளுக்குள்
பத்திரமாய்
தள்ளி வைத்துக் கொண்டது
அதே கண்ணாடி கோப்பையை

12 comments:

  1. //கேட்ட கவிதை
    தன் வரிகளுக்குள்
    பத்திரமாய்
    தள்ளி வைத்துக் கொண்டது
    அதே கண்ணாடி கோப்பையை //

    இந்த வரிகள் மிகவும் நன்றாக உள்ளது அன்பரே....தொடருங்கள்...

    ReplyDelete
  2. உடைந்த கண்ணாடி கோப்பை -யை
    மட்டும் அல்ல உங்கள் கவிதை கை நழுவிய காலத்தையும்
    பத்திரப்படுத்தி கொள்கிறது.
    அருமை கவிஞரே

    ReplyDelete
  3. thanks mankuthirai,kalyani suresh,ashok,balaji and velkannan

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க!

    ReplyDelete
  5. இந்த முதல் பக்கத்தில் உள்ள எல்லா கவிதைகளையும் வாசித்தேன்.ரொம்ப நல்லா இருக்கு.இனி எப்போதும் வரபோகத்தான் இருப்பேன் சந்திரசேகர்.

    ReplyDelete
  6. நன்றி சென்ஷி,பா.ராஜாராம்...சந்திப்போம்.
    pls see my short films here.
    http://www.youtube.com/filmliner

    ReplyDelete
  7. As ever, ரொம்ப அழகா சிந்திக்கறீங்க

    ReplyDelete
  8. (உங்களைப் போலவே) உங்கள் கவிதையும் ரொம்ப ஜாக்கிரதை !!

    ReplyDelete
  9. பத்திரமாய் தள்ளி வைத்துக்கொண்டது கோப்பையை மட்டுமல்ல...
    உங்களையும்.

    ReplyDelete