156-
கண்களில்
குவிந்து கிடக்கும் தைரியம்
போ எனச் சொல்லி
வெளியேற்றுகிறது
கையாலாகாத கண்ணீரை
157-
தயங்கி தயங்கி
பிரார்த்தனையைச் சொன்னேன்
போயிருந்தார் கடவுள்
158-
இந்த சிறையிலிருந்து
வெளியே
வந்தபோதுதான்
நிறைய சிறைகளுக்குள்
என்னை பூட்டி வைத்திருப்பது
தெரிய வந்தது
159-
பெருங்காட்டை
தரிசித்து
வெளிவந்தேன்
உள்ளங்கையில்
பூத்திருந்தது
மூலிகைச் செடி
yellaame nice.........!
ReplyDelete156.
ReplyDeleteகண்ணீரில் கரைந்து போன தைரியத்தை எப்படி திரும்பப் பெறுவது?
157.
கடவுளிடம் என்னங்க தயக்கம்?
158.
அருமையான வரிகள்.
159.
மூலிகை செடி வாடிப் போகாமல் பார்த்துக்கோங்க.