849-
இது என்
இன்றைய முகம்
இதுவே என்
முகமல்ல
850-
வசதியாக
கால் நீட்டி நடக்கிறான்
வழிப்போக்கன்
851-
இந்த பூக்களில்
நீங்கள்
எந்த பூவின்
வாசம்
852-
தெரியாமல்
நடந்த வழி
திரும்பி நடக்க
நட்பாச்சு
853-
அன்பின்
கரம் நீளும்
பிரபஞ்ச
விளிம்பைத் தொடும்
854-
நாய் வாலை
நிமிர்த்திய வரியில்
பொய் சுருண்டிருந்தது
855-
முந்திச்
சென்றவனின் பிணம்
பிந்திச் சென்றது
856-
நான் இல்லாது
போனபின்
என் நிழல்
என்ன செய்யும்
857-
உங்கள்
எந்த முகமூடியும்
அந்த வரிக்கு
பொருந்தவில்லை
விட்டுவிட்டுப் போய்
வேறு வேலை
பாருங்கள்
858-
இருள்
மகுடியென
சுடர் அசையும்
பாம்பென
உங்கள்
ReplyDeleteஎந்த முகமூடியும்
அந்த வரிக்கு
பொருந்தவில்லை
விட்டுவிட்டுப் போய்
வேறு வேலை
பாருங்கள்
அருமையான வரிகள் .
அன்பின் நண்பரே..உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
ReplyDeleteவலைச்சரத்தில் கவிதை சரம்
அன்பின்
ReplyDeleteகரம் நீளும்
பிரபஞ்ச
விளிம்பைத் தொடும்
அழகான வரிகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..