Tuesday, February 02, 2010

என் பெயர்

பயணத்தை
சுவையாக்கியப் பெரியவர்
இறங்கும்போது சொன்னார்

தம்பி உங்க பேரக் கேக்கலன்னு
தப்பா நெனைச்சிக்காதிங்க
மறந்து போயிடும்
இல்ல மாத்தி சொல்லிடுவேன்
அதான்...

கையசைத்தபடியே
பார்த்து நின்ற
அவர் அன்பில்
ஒட்டி இருந்தது
என் பெயர்

2 comments:

  1. //கையசைத்தபடியே
    பார்த்து நின்ற
    அவர் அன்பில்
    ஒட்டி இருந்தது
    என் பெயர்//

    Fantastic lines Raajaa.

    ReplyDelete
  2. //அவர் அன்பில்
    ஒட்டி இருந்தது
    என் பெயர்//

    ss i too like these lines Raaja

    ReplyDelete