தொலைந்த குழந்தையை
தேடிக்கொண்டிருந்தேன்
கிடைக்கவில்லை
எங்கு தொலைந்தது
பேருந்தில் ஏறும்போது
பள்ளிவிட்டு வந்தவேளை
அம்மாவின் கைமறந்து
யார் பின்னாலோ ஓடி
முகவரி மறந்து
எப்படி போயிருக்கும்
தொலைந்த குழந்தையை
தேடிக்கொண்டிருந்தேன்
இருளில் மறைந்திருக்குமா
கடல் குடித்திருக்குமா
தேசம் கடந்து எங்காவது
தொலைந்த குழந்தையை
தேடிக்கொண்டிருந்தேன்
பசியால் அழுமா
நிலவை வேடிக்கைப்பார்த்து
அழுகை நிறுத்துமா
வாகனம் அழுத்தும்
உலோக சாலையில்
ஒதுங்கி நிற்குமா
கால் சூட்டுக்கு
நிழல் தேடுமா
மனிதக்காடு பார்த்து
பயப்படுமா
தொலைந்த குழந்தையை
தேடிக்கொண்டிருந்தேன்
தேடத்தேட
கடைசியில்
தொலந்த குழந்தை
யாரென்று தெரிந்தது
அது என் வயதுக்குள்
புதைந்து போயிருந்தது
ஒவ்வொருவருக்குள்ளும் இது போல தொலைந்து போன ஒரு குழந்தை இருப்பது உண்மைதானே?
ReplyDelete