மகா கற்பனையில் 
ஒரு பெரு வனத்தை 
உருவாக்குகிறீர்கள் 
துளி ஒளி கூட 
விழாத வனம் அது 
அதனுள் போகிறீர்கள் 
ஏதாவது விலங்குகளால் 
வேட்டையாடப்படுவோம் 
என்று பயப்படுகிறீர்கள் 
பெயர் தெரியாத 
விலங்கொன்று அடிக்க 
இறந்து போகிறீர்கள் 
 
 
வணக்கம்
ReplyDeleteகவியை ரசித்தேன்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-