957-
கால்கள் சக்கரம்
உடல் வாகனம்
958-
விரிந்து கிடக்கும்
வெள்ளைத்தாளில்
எங்கே எழுத்து
தேடுகிறேன்
959-
பசியும் தேட
நானும் தேட
பசிக்குக்
கிடைத்தது
எனக்குக் கிடைக்கலாம்
960-
இந்த வலியின் மேல்
வேறொரு வலியைப்
பூசுகிறேன்
ஆறிவிடும்
என்ற
நம்பிக்கையில்
961-
நான் ஒற்றைச்
செங்கல்
ஆனாலும்
சுவரின் கனவுகள்
எனக்குண்டு
962-
மரக்குதிரை
போன தூரம்
அதன் மனதுக்குள்
ரொம்ப நீளம்
963-
வலை அறுத்துக்
கடல் திரும்பும்
மீன்
என்ற வரியுடன்
நீந்தும் மீன்
தூரமாகிறது
கொலை வலைத்
தாண்டி
964-
என் வரைபடத்தை
பொய்யால் எழுத
பூரணமாச்சு
மெய்யால் எழுத
பிய்ந்து போச்சு
மரக்குதிரை, ஒற்றை செங்கல் - மிக அழகான கவிதைகள். வாழ்த்துக்கள்..
ReplyDeleteநான் ஒற்றைச் செங்கல்
ReplyDeleteஆனாலும்
சுவரின் கனவுகள்
எனக்குண்டு
அழகான வரி. ஒவ்வொரு கனவையும் இதனுள் ஆய்வு செய்திட இயலும். (abstract-யாக)