Saturday, April 30, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

456-

நான் எனும் சொல்
நான் சொல்ல
மொழியாயிற்று

457-

முன் கனவை நோக்கி
நான் சென்றேன்
பிற கனவுகள் வந்தன
எனை நோக்கி

458-

நான் வரைந்த பறவை
தான் அமர
வரைந்தது கிளையை

459-

இறந்த கால பிழையை
நிகழ்கால ரப்பரால்
அழிக்கப்பார்த்தேன்
முடியவில்லை
தேய்கிறது எதிர்காலம்

3 comments:

  1. ஹக்கூப் போன்று அமர்க்களப்படுத்துகிறது..
    தங்கள் கவிதை...

    ///
    நான் எனும் சொல்
    நான் சொல்ல
    மொழியாயிற்று//////

    அமர்க்களம்...

    ReplyDelete
  2. /இறந்த கால பிழையை
    நிகழ்கால ரப்பரால்
    அழிக்கப்பார்த்தேன்
    முடியவில்லை
    தேய்கிறது எதிர்காலம் /
    இது ரொம்ப அருமை!

    ReplyDelete
  3. நன்றி அருணா,செளந்தர்.

    ReplyDelete