Thursday, April 28, 2011

ஒரு பூ

எப்போதும் போகும்
சாலை ஓரத்தில்
இப்போது புதிதாய்
பூத்திருக்கிறது
பெயர் தெரியாமல்
ஒரு பூ

1 comment:

  1. இப்பொழுதும் நின்று
    பார்க்கிறேன்
    அப்பூவை
    கே.ஜி. வகுப்புகளில்
    பள்ளியின்
    தோட்டப்பகுதியில்
    பார்த்த
    அதே மலர்ச்சியுடன்

    ReplyDelete