ஒருவன் கடிதம் படிக்க
மற்றவன் கேட்க
இசைக் கச்சேரி போலிருந்தது
கூர்காக்களின் மொழி
கேட்டுக் கொண்டே வந்தவன்
குழந்தையை கைகளில்
கொஞ்சுவது போல்
பாவனை செய்து
ஆட ஆரம்பித்து சிரித்தான்
தான் அப்பா ஆனதாக
மார் தட்டி
சத்தம் போட்டான்
ஓடிப்போய்
மிட்டாய் வாங்கி வந்து
எனக்கும் தந்ததில்
நினைத்தது சரி என்று
தெரிந்தது
தூர உணர்வுகளை
கொட்டிக் கொண்டிருந்தது
கடிதம்
என் நடை முடிந்து
வருகையில்
போயிருந்தான்
கடிதம் படித்தவன்
கடிதத்தின் எழுத்துக்களில்
விளையாடியபடியே இருந்தன
அமர்ந்திருந்த
கூர்காவின் கணகள்
(1.10.08 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)
ராஜா,
ReplyDeleteஉங்கள் கவிதைகள் எல்லாமே பிடித்தமானவையாக உள்ளன. இன்னும் குறுகிய கால இடைவெளியில் எழுத முடிந்தால் படிக்கும் எங்களுக்கு இன்பம் பெருகும்.
இந்தக் கவிதையின் முதல் பத்தி மட்டுமே தனியே படித்தால் ஒரு அழகிய குறுங்கவிதை கிடைக்கிறது. வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
அனுஜன்யா
ReplyDeleteமிக்க நன்றி
அன்புடன்
ராஜாசந்திரசேகர்
கூர்க்காக்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏனோ பாவமாயிருக்கும் எனக்கு. இக்கவிதை அதை ஆழப் படுத்துகிறது.
ReplyDeleteதருமி
ReplyDeleteஎன் மனநிலையில் உங்கள் மனமும்.
நன்றியுடன்
ராஜாசந்திரசேகர்