Thursday, January 10, 2008

சிறுமியின் மரம்

தாத்தாவுடன்
வாக்கிங் போய்விட்டு
வந்த பேத்தி
அவர் கால் கழுவி வருவதற்குள்
வரைந்ததைக் காட்டினாள்

பேத்தியின் பிஞ்சு கிறுக்கலில்
நிமிர்ந்து நின்றது
ஒரு மரம்

கன்னத்தைத் தட்டி
பாராட்டு சொன்ன
தாத்தாவைக் கேட்டாள் சிறுமி

இது எந்த மரம் சொல்லுங்க

விழித்து நின்ற தாத்தாவுக்கு
விடை சொன்னாள்

நடந்து போனப்ப
நாம பாத்தமே
நீங்க கூட சொன்னீங்களே
இது புயல்ல சாஞ்ச மரம்னு

அதுதான் தாத்தா இது
நான் நிக்க வச்சிருக்கேன்

4 comments:

  1. உங்கள் கவிதைகளில் வரும் குழந்தைகள் தனித்துவமாக இருப்பதாகப் பார்க்கிறேன். அவர்களில் உங்களைப் பார்க்கிறேன்.ஒருவேளை நீங்கள் உங்கள் குழந்தையிடம் உங்களின் தத்துவங்களைக் காண்கிறீர்களோ...?

    ReplyDelete
  2. கதை வடிவிலேயே இருக்கிறது. ரெம்ப நல்ல சிந்தனைகள்.

    ReplyDelete
  3. ராஜா சந்திரசேகர்,
    இந்தக் கவிதை மிகவும்நன்றாக இருக்கிறது

    ReplyDelete