உறைந்துபோன
மனநிலையில்
இருந்தோம்
பேச வரவில்லை
அல்லது
வார்த்தைகள்
வரவில்லை
கிளைகளில் அசைவைப்
பார்த்தோம்
உதிர்ந்த இலைகளில் மேல்
பார்வைபட்டுத் திரும்பியது
காற்று தொட்டுப்போனது
கண்களை
மூடிக்கொண்டு
நினைவுகளில்
சொற்களைத் தேடினோம்
கிடைக்கவில்லை
நிசப்தத்தின் நீளம்
அதிகமாகி இருந்தது
ஒருகணம்
கண்களால் புன்னகைத்துவிட்டு
அவரவர்
திசையில்
பயணப்பட்டோம்
உறைந்த நிலையோடு
No comments:
Post a Comment