Tuesday, September 17, 2024

தெரியுமா உங்களுக்கு

நீங்கள் ஓட நினைத்த தூரத்தை

அவர்கள் ஓடி முடித்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு


நீங்கள் வரைய நினைத்த ஓவியத்தை

அவர்கள் வரைந்து பார்த்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு


நீங்கள் எழுத நினைத்த கதையை

அவர்கள் எழுதிப் பிரசுரித்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

 

நீங்கள் களைப்பில்

இளைப்பாறிய நேரத்தில்

அவர்கள் முனைப்பில்

வென்றுவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

 

நீங்கள் உறக்கத்தில்

இழந்த வாய்ப்புகளை

அவர்கள் விழிப்பில் வென்றுவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

 

நீங்கள் காலம் கைகொடுக்கும் என்று

காத்திருந்த நேரத்தில்

அவர்கள் காலத்தோடு கைகோர்த்து

விரைந்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

1 comment:

  1. அருமை...கொஞ்சம் யோசித்துச் செய்யலாம் என நினைத்தால்..முடிவு இப்படித்தான்.. வாழ்த்துகள்

    ReplyDelete