Sunday, February 07, 2021

வாசம்

 கண்கள் ஒளிர

இசையழகு கெடாமல் பாடுவாள் தங்கை

அவளிடம் பாடல் வாசம்

 

விட்டுக்கொடுக்காதவர் அப்பா

அவரிடம் கண்டிப்பு வாசம்

 

மழலை மாறவில்லை குட்டித்தம்பியிடம்

அவனிடம் பிஞ்சு சொற்களின் வாசம்

 

குனிந்த தலை நிமிராமல்

நோண்டிக்கொண்டே இருக்கும் அண்ணனிடம்

செல்போன் வாசம்

 

டீவித்தொடர்களிலிருந்து

வெளிவராத பாட்டிக்கு

கதைகளின் வாசம்

 

வாலாட்டிக்கொண்டே

சுற்றி வருவான் அன்பு

அவனை நாயென்று சொல்லக்கூடாது

அவனுக்கு நன்றிதான் வாசம்

 

காலநேரத்திற்கு ஏற்றார்போல்

மாறும் வாசம் வீட்டிற்குண்டு

 

அம்மாவிற்கு

அதைத்தானே கேட்கிறீர்கள்

 

எப்போதும் மாறாத

சமையலறை வாசம்

 

1 comment:

  1. அவர்களிடம் இருப்பது வாசம் மட்டும்தான். ஆனால் நாங்கள் உங்கள் எழுத்தின்மீது வைத்திருப்பதோ தணியாத நேசம்.

    ReplyDelete