Friday, June 05, 2020

இப்போது

இப்போது

என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்

 

எழுதாத முதல் வரியைப்

படித்துக்கொண்டிருக்கிறேன்

 

இப்போது

 

எழுதாத அடுத்தடுத்த வரிகளைப்

படித்துக்கொண்டிருக்கிறேன்

 

சரி இப்போது

 

மேலும் எழுதாத வரிகளை

 

ம்இப்போது

 

தொடரும் வரிகளை

 

இப்போதும் அதேதானா

எப்போதுதான்

முடிப்பீர்கள்

 

எழுதாத வரிகள்

முடிவதாய் இல்லை

நானும் படிப்பதை

நிறுத்துவதாய் இல்லை

 

 

 

 


No comments:

Post a Comment