Tuesday, November 01, 2011

யாருக்கும் தெரியாமல்

விளை நிலங்களில் எல்லாம்
கட்டிடம் முளைப்பதைப்
பார்த்த விவசாயி
கலங்கிப் போனான்

யாருமற்றப் பயிரைப் போல
வாடிப் போனான்

கட்டிடங்கள்
நிமிர்த்தி அடுக்கி வைக்கப்பட்ட
சவப்பெட்டிகளாக
அவனுக்குத் தோன்றின

பேச்சற்று எல்லோரும்
வேடிக்கைப் பார்ப்பது ஏன்

எதுவும் கேட்காமல்
போவது ஏன் என

ஆயிரம் கேள்விகள் கேட்டு
தனக்குள் அறுந்து போனான்

இளைஞர் சந்ததிக்கு
எச்சரிக்கை கடிதமும்

கையாலாக சமூகத்திற்கு
கண்டனக் கடிதமும்
ஒன்றாய் எழுதி வைத்துவிட்டு
தூக்கில் தொங்கினான்

அதிகாலை பிஞ்சு ஒளியில்
உண்மை போல ஆடியது
அவன் உடல்

யாருக்கும் தெரியாமல்
அவன் கடிதம்
களவாடப்பட்டது

அவன் மரணம்
புதைக்கப்பட்டது

6 comments:

  1. பிடிச்சிருக்கு ,...

    ReplyDelete
  2. தருமி சார்.நன்றி.நலமா.நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்.

    Tuesday, November 01, 2011

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. புதிது புதிதாய் முளைக்கும் கட்டிடங்களைப் பார்க்கும்போது சந்தோஷப்பட்டதைவிட வருத்தப்பட்டது தான் அதிகம்.

    விளைநிலங்களைக் கூறு போட்டு, கூவிக் கூவி விற்றபின் சோற்றுக்கு அண்டை நாடுகளை அண்ணாந்து பார்க்கும் அவலம் இங்கு மட்டுமே...

    ReplyDelete
  5. யார் என்ன செய்தாலும் இவர்கள் திருந்தப்போவதில்லை என்பதை அழுத்தமாக சில்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete