Sunday, March 14, 2010

ஆப்பிள் விளையாட்டு

காருக்குள்
ஆப்பிளை தூக்கிப் போட்டு
விளையாடும்
அப்பாவும் மகளும்

சிக்னல் விழுவதற்குள்
வெளியே வந்து
விழாதா என பார்க்கிறாள்
வெயிலைத்
துடைத்தபடி சிறுமி

5 comments:

  1. சமூகத்தின் இரு துருவங்களையும் ஒரு கவிதைக்குள் காட்டிட்டீங்க. "வெயிலை துடைத்தபடி" நச் வரி.

    ReplyDelete
  2. நம் கண்ணில் ஆங்காங்கே தென்படும் இம்மாதிரி சில சிறுமிகளின் உணர்வுகளை அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். மிக அருமை நண்பரே.

    ReplyDelete
  3. @@@வெயிலைத்
    துடைத்தபடி சிறுமி////

    Beautifull..! :)

    ReplyDelete