Monday, November 09, 2009

அவனும் நானும்

அவன் பைத்தியக்காரனைப்போல
காகிதத்தைத்
தின்று கொண்டிருந்தான்

அருகில் போய்
ஏன் அப்படிச் செய்கிறாய்
எனக் கேட்டேன்

எனக்கு பசித்தது
காகிதத்தில்
ஒரு ஆப்பிளை வரைந்தேன்
சாப்பிட்டு விட்டேன்
எதற்கு பைத்தியக்காரனைப்போல
பார்க்கிறாய்
போ என்றான்

8 comments:

  1. ம‌ழையோடும் சின்ன‌ க‌ம்புக‌ளில் தாங்க‌ப்ப‌ட்ட‌ சின்ன‌ குச்சில் பாலிதீன் க‌வ‌ர்க‌ளை க‌விழ்ந்த‌ ப‌டி கிட‌க்கும் எங்க‌ள் தெரு பைத்திய‌க்கார‌ கிழ‌வியின் பிம்ப‌ம் ந‌னைந்த‌ப‌டி ம‌ன்சுள் ஓடுது உங்க‌ள் வ‌ரியில்...

    ReplyDelete
  2. தமயந்தி
    இது போன்ற பிம்பங்கள் நம்மைத் துரத்துகின்றன.உங்கள் வருகைக்கும் வரிகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. //காகிதத்தில்
    ஒரு ஆப்பிளை வரைந்தேன்
    சாப்பிட்டு விட்டேன்//

    என்ன சொல்லிப் பாராட்ட இந்த வரிகளுக்கு

    ReplyDelete
  4. அவர்களும் குழந்தைகளை போலத்தானோ? குழந்தைகளின் உலகம் போல அவர்களின் உலகமும் அதிசயம்தானோ?

    ReplyDelete
  5. நன்று! ஒரு பெரிய தத்துவத்தை சுலபமாக கவித்துவம் கலந்து கொடுத்தமை ஆச்சரியபட வைக்கிறது.

    ReplyDelete
  6. nalla yezhuthiyirukkeenga.........

    ReplyDelete