Sunday, March 08, 2009

தொலைந்து போதல்

கூட்டங்களில்
தொலைந்து போவது
பிடித்திருக்கிறது
அனுபவ நெரிசல்களோடு
திரும்ப வந்து சேர்ந்து
தனித்து நடக்கையில்
கூட்டம் தொலைந்து போவதும்
பிடித்திருக்கிறது

4 comments:

  1. கூட்டத்தில் அனுபவங்களை சேகரித்துவிட்டு அசைபோட்டபடியே தனித்து நடப்பது சுகம். இதை நல்லா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  2. சொன்னதைப் படிக்கும்போது
    அதை எழுதும்போது இருந்த
    உங்கள் மனநிலை தெரிவது
    போலிருக்கிறது. நன்று.

    ReplyDelete