Friday, April 11, 2008

வெளவால் மண்டபம்

இருளில்
பசியில்
ஏதுமில்லாமல்
கிடந்த
பிச்சைக்காரியைப்
புணர்ந்தவர்கள்
விலகிப்போனார்கள்
வேகமாய்

அவள் அழுகை
அங்குமிங்குமாய் அலைந்து
வழி அறியாமல்
திரும்புகிறது
அவளிடமே

நடுங்கும்
வெளவால் மண்டபம்
அவளோடு சேர்ந்து

உதவிக்கு வர இயலாமல்
புரண்டு படுக்கிறான்
கல்லறைக்குள் இருப்பவன்

அவள் ரத்தம் கலைக்கப்
பெய்கிறது மழை

துன்பம் பார்த்து
நகர்கிறது பெளர்ணமி

மண் அள்ளி வீசி
உலகை சபிக்கிறது
ஒரு பைத்தியத்தின் குரல்

(புதிய பார்வை ஏப்ரல்16-30,08இதழில்
பிரசுரமானது)

2 comments:

  1. ஒ இதான் கவிதயா :-))

    வவ்வால் மண்டபம்னு பார்த்ததும் ஆர்வத்தில ஓடி வந்திட்டேன் :-))

    ReplyDelete
  2. thiraipadam parthadhu pondra unarvu
    manadhai kasakki pizhindadhu

    ReplyDelete