Friday, April 11, 2008

சொற்களில் பெய்த மழை

நின்றவுடன் போகலாம்
இருக்கச் சொன்னேன்
வேலை இருப்பதாகப்
புன்னகைத்தபடியே
போனார் நண்பர்

அடுத்த முறை
வந்தபோது
அவர் சொற்களில்
பெய்து கொண்டிருந்தது
நனைந்து சென்ற மழை

(புதிய பார்வை ஏப்ரல்16-30,08இதழில்
பிரசுரமானது)

1 comment:

  1. அடடா மற்றுமொரு மழைப் பதிவு!!!நல்லா இருக்கு!
    இது மழைக் காலம் போல ...நான் கூட இது போல ஒரு மழைப் பதிவு ரெண்டு நாள் முன்னால போட்டிருக்கேன்!!
    அன்புடன் அருணா

    ReplyDelete