Powered by Blogger.

ஆப்பிள் மரம்

Saturday, November 10, 2012

நான் ஆப்பிள் மரம் 
உங்களுக்கு எத்தனை 
ஆப்பிள் வேண்டும் 
கேளுங்கள் தருகிறேன் 
சொன்னாள் குழந்தை 

ஆப்பிள் மரம்தான் வேண்டும் 
எனச் சொல்லி 
அவளைத் தூக்கி கொஞ்ச 
விடாமல் சிரித்தாள் 

அவள் சிரிப்பில் 
உதிர்ந்து கொண்டே இருந்தன 
ஆப்பிள்கள்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... அருமை... மிகவும் ரசித்தேன்...

ராஜா சந்திரசேகர் said...

மிக்க நன்றி தனபால்.

Shahjahan Rahman said...

வாஹ்....

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்