Powered by Blogger.

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Friday, March 05, 2010

50-

அதுவாக
போகிறது ஆமை
நாம்தான்
மெதுவாக என்று
குறியீடு செய்கிறோம்

51-

உதிர்ந்து கொண்டிருந்தது
மரம்
விழுந்து முடித்தது
இலை

52-

அவர்கள்
கண்ணீரோடு வந்தார்கள்
கடுமையான
சோதனைகளுக்குப் பிறகு
கவலை சத்து
குறைவாக இருக்கிறதென்று
திருப்பி அனுப்பபட்டார்கள்

53-

தூக்கி எறிந்த துப்பாக்கி
சொல்லிக் கொண்டே விழுகிறது
கொன்றவர்களின் பெயரை

6 comments:

ஜெரி ஈசானந்தா. said...

குறிப்புகளை ரசித்தேன்

நிலாரசிகன் said...

முதல் கவிதை அருமை:)

திகழ் said...

/அதுவாக
போகிறது ஆமை
நாம்தான்
மெதுவாக என்று
குறியீடு செய்கிறோம்/

அருமை

சுந்தர்ஜி said...

அதுவாகப் போக விடுவதில்லை எதையும் நாம். அருமை சந்துரு.

இரசிகை said...

50,51-remba pidichathu:)

சேரல் said...

//அதுவாக
போகிறது ஆமை
நாம்தான்
மெதுவாக என்று
குறியீடு செய்கிறோம்//

இது மிக அருமை!

-ப்ரியமுடன்
சேரல்

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்