பூ ஜாடியை
மாற்றி வைப்பது
அவன் வேலை
தினம் தினம்
பூக்களை நிரப்பி
அதை செய்கிறான்
புதிய நாளை
டேபிளில் வைத்து
முந்தைய நாளை
எடுத்துப்போவது போலிருக்கும்
அவன் செய்வது
காற்றில் ஆடி
நன்றி சொல்லும் பூக்கள்
பூக்களுக்கும் அவனுக்குமான இசைவில்
வாசம் இருந்தது
பூ ஜாடியை
மாற்றி வைப்பது
அவன் வேலை
அலுப்பிலாமல்
செய்கிறான் இதை
பூக்கள் பஞ்சம்
வந்ததில்லை அவனுக்கு
அவன் புன்னகையில்
சில பூக்கள் ஒட்டி இருக்கும்
அவனே உதிர்ந்து
பின் மலர்வது போலிருக்கும்
ஒவ்வொரு முறை
இதை செய்யும் போதும்
pleasent-aa irukku.
ReplyDeleteI love this poem. :)
ReplyDeleteபுதிய நாளை
ReplyDeleteடேபிளில் வைத்து
முந்தைய நாளை
எடுத்துப்போவது போலிருக்கும்
:)
அவனே உதிர்ந்து
பின் மலர்வது போலிருக்கும்
ஒவ்வொரு முறை
இதை செய்யும் போதும்
:)
nice lines
சாயா நன்றியும் அன்பும்.
ReplyDelete