1-
வெறும் கைகளுடன்
வெறும் கைகளுடன்
திரும்புகிறார் அப்பா
அந்தக் கைகளுக்கு
முத்தம் தருகிறாள் குழந்தை
2-
மழைக்குள் இருக்கும்
குழந்தைகளுக்கு
நனைவது தெரியவில்லை
மழைக்கு வெளியே
இருக்கும் நமக்கு
நனையத் தெரியவில்லை
முதல் கவிதை சூப்ப்பர். அன்பைத் தவிர வேறெதும் எதிர்பார்க்காத குழந்தை அமைய கொடுத்து வச்சிருக்கனும்.
ReplyDelete