Powered by Blogger.

பதினேழு முறை...

Monday, January 26, 2009

இதுவரை
பதினேழு முறை நான்
இறந்து விட்டேன்

உன் வலி இறக்கிய வார்த்தைகளில்
இரண்டு முறை

நண்பனின் ஏளன மெளனத்தில்
ஓரிரு முறை

தன் துரோகத்திற்கு
என் பெயர் சூட்டி மகிழ்ந்த
உறவினரின் செயலுக்கு
ஒரு முறை

தம் செளகர்யங்களுக்குத் தக்கபடி
என்னை பிடுங்கி
பின் நட்டு வைக்கும்
கரங்களில் பலமுறை

இப்படி இதுவரை
பதினேழு முறை நான்
இறந்து விட்டேன்
(சில விடுபட்டிருக்கலாம்)

வேண்டுமானால்
நீங்களும் என்னை
சாகடித்துக் கொள்ளலாம்

என் நிஜ மரணத்தில்
சேர்த்து வைப்பேன்
எல்லா இந்த
மிச்ச மரணங்களையும்

2 comments:

sugirtha said...

'பதினேழு முறை' யில் மரணம் என்ற வார்த்தையில் வலியின் வலி உணர்ந்தேன். மற்ற கவிதைகளும் அருமை. 'ஏதாவது ஒரு நான்' எனக்கு பிடித்தது. பாராட்டுக்கள்.

rama said...

please read my poem " maranam baavitha en udal" which came in uyirosai of uyirmai.com which will be of this same wave lenth..... waiting for your comments on that... ur thoughts in many poems r impresing me a lot.... 'vaarungal ilaipaaralaam ' i enjoyd it..

endrum anbudan,


inba...
inbasubramanian.blogspot.com

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்