கற்றுத்தரும் தருணங்களுக்கு நன்றி பெற்றுத்தரும் தருணங்களுக்கு நன்றி பெருமை சேர்க்கும் தருணங்களுக்கு நன்றி
அன்பான தருணங்களுக்கு நன்றி அழைத்துச்செல்லும் தருணங்களுக்கு நன்றி இயல்பான தருணங்களுக்கு நன்றி இணைந்துகொள்ளும் தருணங்களுக்கு நன்றி
உயர்வானத் தருணங்களுக்கு நன்றி உவப்பான தருணங்களுக்கு நன்றி
பிரார்த்தனைத் தருணங்களுக்கு நன்றி பிரியமான தருணங்களுக்கு நன்றி புன்னகையின் தருணங்களுக்கு நன்றி புதிதாக்கும் தருணங்களுக்கு நன்றி புரிய வைக்கும் தருணங்களுக்கு நன்றி
தனிமையான தருணங்களுக்கு நன்றி தங்கிப்போகும் தருணங்களுக்கு நன்றி நெகிழ்வானத் தருணங்களுக்கு நன்றி
நட்பின் தருணங்களுக்கு நன்றி நாளின் தருணங்களுக்கு நன்றி நன்றி சொல்ல வைக்கும் தருணங்களுக்கு நன்றி
தள்ளிப் போடு காலம் கடத்து கத்திப் பேசு குழப்பு மயக்கம் கொள் மந்தமாக இரு அடிமைகளை உன் பாட்டுக்கு ஆட விடு விக்கல் வருது பார் நீயே நீர் குடி விவசாயிகளின் தற்கொலைப்பட்டியலைப் பிரி உரக்கப்படி உடல் அதிர்வு இருக்கட்டும் கண்ணீர் விடு கள்ள மெளனம் விடாதே மேடை அபகரி வேடங்கள் போடு நடி உளறு உணர்ச்சிவசப்படு உன் வசதிக்கு வளை அழுத்தம் கொடு வீக்கம் மறை ஊடக வெளிச்சத்தில் உருகு வசனங்களை மாற்றிக்கொண்டே இரு விடாமல் அரசியல் செய் மக்கள் மனதிலிருந்து அழிந்து போ