Sunday, February 08, 2009

இருவரும்

ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்து கொள்ளலாமா என
கேட்கும் பெண்ணுக்கு
இடம் கொடுத்து
மாறி அமர்ந்தேன்
பயணம் முடியும் வரை
பேசிக்கொள்ளவில்லை
இருவரும்
ஆனாலும் பழக்கமாயின
அவளுக்கு இயற்கையும்
எனக்கு அவள் ரசனையும்

5 comments:

  1. எவ்வளவு அழகா யோசிச்சிருக்கீங்க. hats off to you...Below lines are too too good :)

    ஆனாலும் பழக்கமாயின
    அவளுக்கு இயற்கையும்
    எனக்கு அவள் ரசனையும்

    ReplyDelete
  2. சுகி
    நன்றி.இந்த வரிகளை எழுதியதை தாண்டி நானும் ரசித்தேன்.

    ReplyDelete
  3. இன்றுதான் உங்களின் படைப்புகளைப் படிக்கிறேன்.. அனைத்துமே சிறப்பு.. வாழ்த்துகள்.. :)

    ReplyDelete