ரயிலில்
புல்லாங்குழல் வாசித்த
பெரியவரிடம்
அது என்ன ராகம் என்றேன்
தெரியாது என்றார்
பெயரைக் கேட்டேன்
சொன்னார்
துணையாக வந்தது
அவர் இசை
இறங்கியபோது
அவரிடம் சொன்னேன்
அந்த ராகத்தின் பெயர்
தெரியுமென்று
வியப்புடன் பார்த்தார்
அவருக்குத் தெரியாது
அவர் பெயரை
அந்த ராகத்திற்கு
நான் வைத்திருப்பது
சான்ஸ் ஏ இல்லப்பா
ReplyDeleteவாட் எ நைஸ் கவிதை
பீலிங்க்ஸ் ஆகிட்டேன்பபா
wow..........
ReplyDelete