15
ஏற்று
காற்றுத் திரியை
காற்றில்
அணையாமல் எரிய
16
சூன்யம் தின்னும் குரங்கு
கிளை தாவும்
தாவும்
தாவும்
தா
வும்
மரணம் தாவும்
17
இறந்துபோனவர்கள்
விழித்துக் கொண்டார்கள்
தூங்கியவர்கள்
எழவில்லை
18
என் அரசவையில்
மக்களென்று
யாருமில்லை
எல்லோரும்
ராஜாக்கள்தான்
19
எல்லா முடிந்த
கவிதையிலும்
ஒரு முடியாத
கவிதை
கொஞ்சம் force ஆ இருக்கிற மாதிரி தோணுது. இருந்தாலும் கூட எனக்கு பிடிச்சிருக்கு.
ReplyDelete18-vathu nice........
ReplyDelete