யாரோ ஒரு பெரியவர்
என் கைப் பிடித்து
அழைத்துப் போகச் சொல்கிறார்
நடுக்கத்துடன்
வழித் தெரியாமல்
தடுமாறி நிற்கும் நான்
அவரிடம்
இதை எப்படிச் சொல்வது
செய்வதறியாது
அவர் கையைப்
பற்றிக் கொள்கிறேன்
இப்போது
எங்களுக்குத் தேவை
சிறு அன்பு
சின்னப் புன்னகை
கொஞ்சம் உணவு
நிறைய நம்பிக்கை
ஒரு பாதை
கவிதை அருமை ... தங்கள் வலைப்பூ கண்டத்தில் மகிழ்ச்சி.. என்னுடைய வலைப்பூ http://ethilumpudhumai.blogspot.in/ நன்றி
ReplyDelete