Thursday, March 14, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

996-

பறவையே 
சொல் 
நான் உன் 
வானமா 
கூண்டா

997-

உடைந்த 
கனவொன்றை 
இரண்டாக 
வளர்க்கிறேன்

998-

நான் 
பஞ்சுதான்
கனமான பஞ்சு

999-
பிடிக்கும் இருள்
ஒளிரவும்
செய்கிறது

1000-
இதற்கெல்லாம் 
உங்களுக்கு
எங்கே 
நேரமிருக்கிறது

நேரத்தில்தான் 
இருக்கிறது

1001-

மனதிலிருப்பதை 
மனதால் படிப்பது 
மகத்தானது


1002-

என்னிடம் பேச
உங்களிடம் ஏதாவது
இருக்கிறதா

எதுவுமில்லை
வார்த்தைகள் 
இருக்கின்றன


1 comment:

  1. எல்லாவற்றையும் விட 1001 மிகவும் பிடிக்கும்...

    ReplyDelete