விடியும் வரை
எழுதிக் கொண்டிருந்தேன்
விடிந்த பின்
கிழித்துப் போட்டேன்
பல நூறு
விடியல்கள் பார்த்துப்
பல்லாயிரம்
பக்கங்கள் தாண்டி
எழுதக் கிடைக்கலாம்
அழிக்கவே முடியாத
முதல் வார்த்தை
எழுதிக் கொண்டிருந்தேன்
விடிந்த பின்
கிழித்துப் போட்டேன்
பல நூறு
விடியல்கள் பார்த்துப்
பல்லாயிரம்
பக்கங்கள் தாண்டி
எழுதக் கிடைக்கலாம்
அழிக்கவே முடியாத
முதல் வார்த்தை
சில சமயம் இந்த முதல் வார்த்தைக்கான தேடல் என்பது கூட ஒரு கற்பிதமோ, ஒரு இல்லாத பொருளுக்கான வேட்கையோ, உடோப்பியாவிற்கான ஆழ்மன ஆசையோ என்று தோன்றி விடுகிறது. சிலருக்கு வேட்கை அசுரதனமாய் வளர்கிறது. சிலருக்கு வெறுமையில் பொசுங்கி போகிறது. மற்றொரு சமயம் எதையாவது தேடி தானே போக வேண்டும், நின்று விட முடியாதே என்றும் தோன்றுகிறது.
ReplyDelete