சொல்லிடம் அனுமதி கேட்டு
தங்க வந்த முள்
நாளாக நாளாக
சொல்லைக் குத்த ஆரம்பித்தது
நன்றி இழந்த முள்
ஒரு நாள்
முனையையும் இழந்தது
பின் இறந்தது
முள்ளை
அடக்கம் செய்துவிட்டு
அதன் மேல்
பூவை வைத்த சொல்
வானம் பார்த்தது
அப்போது பெய்த
மழையின் துளி
வசிக்கிறது சொல்லில்
வளர்கிறது சொல்
கவிதையில்
வளர்கிறது சொல்
ReplyDeleteகவிதையில்..
நல்ல கவிதை!!
1 chorinthiyar 13-aam athikaaram!
ReplyDeletesol anbaip pontrathuthaan.....
நல்லா இருக்கு ராஜா சார்
ReplyDelete