488-
கிளையாக
நீண்டுபோனதை
முறித்துப் போடலாம் என
முடிவு செய்தபோதுதான்
தெரிந்தது
ஆழமாக
வேர்விட்டிருப்பது
489-
உங்களிடம்
நெருப்பு இருக்கிறது
அணையாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்
நான் அணைக்காமல்
பார்க்க வேண்டும்
என்பதில்லை
அதுவே அணையாமல்
பார்த்துக்கொள்ளும்
490-
முதுகு சொறிந்துவிடுபவரைப்
பார்த்தேன்
முகமே இல்லாமல்
பேசிக்கொண்டிருந்தார்
491-
அந்தரத்தில்
மிதந்துகொண்டிருந்தேன்
தள்ளிவிடுவார்களோ என்று
யோசித்தபோது
விழுந்துபோனேன்
492-
கையளவே
வார்த்தைகள்
கடலில்
எறிகிறேன்
மூழ்கி
மீன்களோடு
விளையாடிவிட்டுப்
போகட்டும்
493-
அல்லது இது
அல்லது அது
அல்லது எதுஎனினும்
என அல்லதுகளில்
கழியுது காலம்
494-
அசையும் கிளை
சொல்லெடுத்துத் தர
உரையாடுகிறேன்
வனத்துடன
ஆஹா அருமை ஒவ்வொரு சிறு கவிதையும் ஆலமானக் கருத்தை சொல்லி செல்கிறது . பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteஅல்லது இது
ReplyDeleteஅல்லது அது
அல்லது எதுஎனினும்
என அல்லதுகளில்
கழியுது காலம்
//
அருமை... வாழ்த்துக்கள்