பூங்கொத்தோடு வந்தவர்
நண்பனின் வார்டை
தேடிக்கொண்டிருக்கிறார்
நோய்மைக் குழந்தை
புன்னகைத்துப் பார்க்கிறது
முதலில் அவரை
பிறகு பூங்கொத்தை
நின்றுவிடுபவர்
அருகில் போய்
குழந்தையின் தலைதடவி
பூங்கொத்தைத் தருகிறார்
வாங்கி அணைத்து
சிரிக்கிறது குழந்தை
ஒரு பூவை
கிள்ளி எடுத்து
குழந்தையின்
கன்னத்தை தடவிவிட்டு
ஓடுகிறார்
நண்பனைத் தேடி
தூரமாகும் அவரைப்
பார்த்தபடியே
பூங்கொத்தில்
முகம் புதைக்கிறது
குழந்தை
வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎளிமையான மற்றும் எதார்த்த கவிதை..
Super..!
ReplyDeleteநன்றாயிருக்கு...
ReplyDeleteஅருமை.வாழ்த்துக்கள்.
ReplyDelete