377-
உங்கள் கண்ணீர்
உண்மையா
பொய்யா
நான் பொய்
கண்ணீர் உண்மை
378-
கிளையில் பறவை
தொங்க வந்தவன் ரசிக்கிறான்
அலகு கொத்துவதைப் பார்த்து
379-
பனிப்பாறை மேல்
படுத்திருந்தேன்
பாறை உருகுவதை நானும்
நான் உருகுவதை
பனியும் பார்த்தபடி
380-
ஒட்டடை
படிந்த தூரிகை
ஓவியத்தைப் பார்க்காது
381-
ஒத்திகை செய்யும் மரணம்
ஒருபோதும்
நேரத்தை சொல்வதில்லை
382-
விதியை
உருவாக்குபவர்களை
விதி ஒன்றும்
செய்வதில்லை
//ஒட்டடை
ReplyDeleteபடிந்த தூரிகை
ஓவியத்தைப் பார்க்காது
//
பொன்மொழி போல் ஒரு கவிதை. அருமை.
//
ReplyDeleteஉங்கள் கண்ணீர்
உண்மையா
பொய்யா
நான் பொய்
கண்ணீர் உண்மை
//
:)