முன் திட்டம்
தயாராயிற்று
புத்திசாலித்தனமாக
வீழ்த்த வேண்டும்
ஓவியரை
அணுகினேன்
உங்களிடமிருந்து
எனக்கு ஒரு
சிறு கோடு மட்டும் போதும்
ஓவியம் எதுவும் வேண்டாம்
குவிந்துப் பார்த்தார்
அப்போது வரைந்திருந்த
காளிரூபம் கொண்ட பெண்ணின்
ஒரு பகுதியைக்
கிழித்துத் தந்தார்
அதிலிருந்தது
கோடு
நேராய்
வளைவாய்
பலவாய்
பிறகு போய்விட்டார்
தன் வண்ணங்களின்
குகைக்குள்
ஒரு கணம் நின்று
நடந்தேன்
என் கையில்
கோடும்
அதில் கனக்கும் பெண்ணும்
நல்லாருக்கு சந்திரா!
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDeleteநன்றி பா.ரா.ரொம்ப நாளாயிற்று பார்த்து.நன்றி கனாக்காதலன்.
ReplyDelete