Monday, December 20, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

270-

குற்றம் செய்
குற்றம் அழிக்கும்
குற்றம் செய்

271-

தற்கொலைக்கு முன்
குடிக்கும் தேநீர்
வரியில் தொங்கியது
உயிரின் கயிறு

272-

உடன் வந்தவர்கள்
ஓடிப்போனார்கள்
கத்தி எறியப்போகிறவன்
கடைசி முறை
சிறுநீர் கழித்துவிட்டு
வரச் சொல்கிறான்

273-

வாய் அதக்கி
சேர்த்து
நசுக்கி
ரத்தம் பாயந்த
வார்த்தைகளைத்
துப்பிவிட்டு நடந்தேன்
பேச எதுவுமில்லை

274-

நஞ்சு கலந்திருக்கிறது
சொற்களின் வசீகரத்தில்
மயங்கிவிடாதீர்கள்

275-

கண் மூட
சுழலும் மெளனம்
காதோரம்

276-

எண்ணும் போதெல்லாம்
கூடிப்போகின்றன
அள்ளி வந்த பொய்கள்

2 comments:

  1. //தற்கொலைக்கு முன்
    குடிக்கும் தேநீர்
    வரியில் தொங்கியது
    உயிரின் கயிறு//

    கவிதை வரிகள் அருமை. தொடருங்கள் !!

    ReplyDelete
  2. பல அருமை
    சில வெகுஅருமை

    ReplyDelete