Tuesday, October 19, 2010

நடந்து கொண்டிருப்பவன்

அவன் நடந்து கொண்டிருந்தான்

நடந்து நடந்து
நடந்து நடந்து

அவன் நடந்து கொண்டிருந்தான்

இருளில்
வெயிலில்
மழையில்
வனத்தில்
மலையில் என

அவன் நடந்து கொண்டேயிருந்தான்

நடந்து முடிக்கும்
தூரப் புள்ளிகளில்
தானே நின்று
தன்னை வரவேற்று
அனுப்பியபடி

வழித் தடங்களில்
வருபவர்களுக்கான
முகவரிகளை
விட்டுச் சென்றபடி

அவன் நடந்து கொண்டிருந்தான்

தன் கால்களுக்குள் நுழைந்து
இதயம் அடைந்து
மூளையிலிருந்து வெளியேறி
நின்று போகாத மந்திரத்தை
உச்சரித்தபடி

அவன் நடந்து கொண்டிருந்தான்

கடந்து கொண்டிருந்தான்

நீங்களும் அவனை
ஏதாவது ஒரு தருணத்தில்
பார்த்துவிட முடியும்

அல்லது

ஏதாவது ஒரு கணத்தில்
அவனாக மாறிவிட முடியும்

1 comment:

  1. நின்று போகாத இயக்கமும், தொடர்கின்ற முன்னேற்றமும் கொண்ட ஒரு வெற்றியாளரை தரிசிக்க முடிகிறது இந்த வரிகளில்.

    ReplyDelete