Friday, October 01, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

190-

போய்விட்டார்கள்
காலடித்தடங்களில்
நெளிகிறது மொழி

191-

நடந்து முடிந்த
அறுநூற்று அறுபத்தாறு
குற்றங்களையும் செய்த
குற்றவாளி நான்தான்
என்னை விட்டுவிட்டு
அறுநூற்று அறுபத்தியேழாவது
நபரை கைது செய்து
விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்
ஏதோ கிடைத்துவிடும் என்ற
அதீத நம்பிக்கையில்

192-

ஓவியம் என்று
சொல்லாதீர்கள்
ஒற்றை கோட்டை
ஒற்றைக் கோடு
என்றே சொல்லுங்கள்

3 comments:

  1. நல்லாயிருக்குங்அ ..

    ReplyDelete
  2. //போய்விட்டார்கள்
    காலடித்தடங்களில்
    நெளிகிறது மொழி//
    அருமை

    ReplyDelete
  3. //ஓவியம் என்று
    சொல்லாதீர்கள்
    ஒற்றை கோட்டை
    ஒற்றைக் கோடு
    என்றே சொல்லுங்கள்//

    அருமை.

    ReplyDelete